Friday, April 26, 2019


இலங்கை மற்றும் நியூசிலாந்து: உண்மையான தொடர்பு

டாக்டர் சந்திரா முஸாபர் -தமிழில் முஹம்மத் றஸீன்.

ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையில் நடந்த படுகொலைகளை எல்லா இடங்களிலும் வாழும் மக்களால் கண்டனம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 இல் ஈஸ்டர் ஆராதனைகளிலும், ஹோட்டல்களிலும் கலந்து கொண்டவர்களில் குறைந்தபட்சம் 300 பேரின் படுகொலைகள், எந்த மதத்தின் பார்வையிலும், ஒரு குரூரமான குற்றச்செயல் என்பதை, பல்வேறு சமய மரபுகளைச் சேர்ந்த தனிநபர்களும் குழுக்களும், வலியுறுத்தி வருகின்றன.

இது, 2019 மார்ச் 15ஆம் திகதி நியூசிலாந்திலுள்ள கிறைஸ்ட்சர்ச், பள்ளிவாசல்களில், வெள்ளையின மேலாதிக்கவாதி ஒருவனால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் வழிபாட்டாளர்கள் மீதான படுகொலைகளுக்கு, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற உள்ளூர் முஸ்லிம் தீவிரவரதக் குழுவினரின் பழிவாங்கல் நடவடிக்கை என ஓங்கி ஒழிக்கும் குரல்களுக்கு நடுவே ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமிருந்தும் அதேவிதமான குரல்கள் எழுத்துள்ளமையால் இதனை கோடிட்டுக்காட்டுவது அவசியமாகின்றது,  கிறைஸ்ட்சர்ச்சில் உயிரிழந்த 51 பேரின் ஒருசில நெருங்கிய உறவினர்கள் பகிரங்கமாகவே அந்த மேலாதிக்கவாதியை மன்னித்த நிலையில், அவர்கள் சார்பில் ஸ்ரீலங்காவில் சிறிய அளவில் அறியப்பட்ட ஒரு குழு எவ்வாறு பழிவாங்கலில் ஈடுபட முடியும்?

முஸ்லிம்கள் மீதான, கணிசமான  கிரிஸ்தவர்களைக் கொண்ட நியூசிலாந்துவாசிகளினது இரக்க சிந்தையும், அனுதாப அலைகளும், அதற்கு, நாட்டிலும் ஏனைய இடங்களிலும் நியூசிலாந்து மக்கள் மற்றும் குறிப்பாக பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ஆகியோர் மீதான ஆழ்ந்த நன்றி மற்றும் மரியாதை உணர்வுடனான முஸ்லிம்களின் பதில் நடத்தைகளும் படுகொலைக்கு பின்னரான சூழ்நிலையை மாற்ற உதவியது. பழிவாங்கலும், வெறுப்புணர்வும் சமூகத்தின் ஓரத்துக்குத் தள்ளப்பட்டது. மற்றொரு கோணத்தில் இருந்து பார்த்தால், பழிவாங்கும் கோட்பாடு 'முட்டாள்தனமானது' என்றும் பாதுகாப்பை நிர்வகிப்பதில் ஒரு செயலற்ற அரசாங்கத்தின் இயலாமையை மூடிமறைக்க முற்படும் ஒரு செயல் எனவும் ஒரு அவுஸ்திரேலிய கல்வியியலாளர் வாதிட்டார்.

யாராவது ஒருவர் ஸ்ரீலங்கா படுகொலைக்கான உள்நோக்கத்தைத் தேடுபவராக இருந்தால், அவர் ஏனைய காரணிகளுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கலாம். கிறைஸ்ட்சர்ச்சின் துயர சம்பவத்திலிருந்து உருவாகி வளர்ந்த நேர்மறையான சூழ்நிலை, சமூகங்களுக்கு இடையே வெறுப்பு மற்றும் மோதல்களை தூண்டிவிடும் நரகவாதிகளான மதவெறியர்களுக்கும் விதண்டாவாதிகளுக்கும் ஒரு சாபக்கேடாகும். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர் களிடையேயும்  இத்தகையவர்கள் காணப்படலாம். வரலாற்றில் வேறுபட்ட காலங்களில் தீவிர நாத்திகர்கள், உட்பட, மற்றவர்களும் வேண்டுமென்றே இரு சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயன்று வந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் நடப்பது போலவே, கிறிஸ்தவ-முஸ்லிம் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான நன்கு திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாகவே ஸ்ரீலங்கா படுகொலைகளை நான் காண்கிறேன். பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, புறக்கணிப்பு, நீக்குதல், மற்றும் தடைகளைகளுக்கான இயக்கமாக தற்போது வளர்ந்து வருகிறது. எனவே, இதுவே நியூசிலாந்திற்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையிலான உண்மையான தொடர்பாகும். அதாவது, நியூசிலாந்து படுகொலைக்கு பின்னர், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையில் நிலவி வரும் நேர்மறை நிகழ்வுகளை அழித்தொழிகும் வகையில் முஸ்லிம் குழுவினால் நடத்தப்பட்ட ஒரு கொடுஞ்செயலாக, ஸ்ரீலங்கா படுகொலை கையாளப்பட்டிருக்கின்றது.

இலங்கைச் சம்பவம் மற்றொரு காரணியையும், தெளிவுபடுத்துவதாக உள்ளது. இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பயங்கரவாதம், மற்றும் வன்முறை ஆகியவற்றின்பால் சாய்கின்றனர் என்ற மாயையை உருவாக்கும், அவர்களது நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் இச்சம்பவம் அமைகிறது. சமய மற்றும் அதன் ஆதரவாளர்களின் இந்த மாயத் தோற்றம், தொடர்ந்து 1000 ஆண்டுகளுக்கும் மேலாக சிலுவைப் போர்களைத் தொடர்ந்து, மத ரீதியாகவும் ஐரோப்பாவில் மதச்சார்பற்ற மேட்டுக்குடியினரால், பெரு முயற்சியுடன் நிலைநாட்டப்பட்டு வருகின்றது. ஏற்கனவே குறிப்பிட்ட சில பலஸ்தீன இயக்கங்களைப் போல, வன்முறையற்ற போராட்ட முறைகள் இன்னும் முக்கியத்துவம் பெற்று வருகின்றமையால் இன்று அது மிக மிக அவசியமாகிவிட்டது. குறிப்பாக ஐரோப்பியர்கள் மத்தியில் அது உள்வாங்கப்படும் போது, இஸ்ரேலும் அமெரிக்காவும் திகைத்து நிற்கின்றன. போராளிகள், பயங்கரவாதத்தை மையமாகக்கொண்ட பாலஸ்தீன இயக்கங்கள் மற்றும் ஏனைய இயக்கங்கள் மூலம் இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளன என்பதை இப்போது அவர்களது சகாக்கள் சிலரைக்கூட நம்ப வைப்பது மிகவும் கடினமாக உள்ளது. கிறைஸ்ட்சர்ச்சில் முஸ்லிம்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பின்பும், சிலர், முஸ்லிம்கள், இன்னும் வன்முறை யாளர்களாகவே இருக்கிறார்கள் என்று உலகத்தை நம்பவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில், இலங்கை படுகொலைகள் பயங்கரவாதத்தை பற்றிய ஆழமான புரிதலை வளர்க்க நம்மை தூண்டுகிறது. படுகொலைக்கு பின்னால் .எஸ்..எஸ் இருப்பதாக உரிமை கோரப்பட்டதும், .எஸ்..எஸ்.  எப்படித் தோன்றியது? .எஸ்..எஸ்.ஐத் தக்கவைக்க யார் உதவி செய்கிறார்கள்? தாயிஸை உருவாக்கியவர் யார்? அல்லது அந்த விஷயத்திற்கு அல் கைய்தாவைப் போஷிப்பவர்கள் யார்? போன்ற .எஸ்..எஸ். பற்றிய கேள்விகள், ஒருவர் உள்ளத்தில் எழவேண்டும். இன்று நமக்கு தெரிந்த பயங்கரவாத அமைப்புக்கள எல்லாமே, பூகோள அரசியல், பூகோள ஆதிக்கம் மற்றும் அதிகாரம் என்பவற்றுடன் பின்னிப் பிணைந்துள்மை தெளிவாகத் தெரிந்த விடயமே.

இருப்பினும், அதிகார சக்திகள் மூலமாக பயங்கரவாதத்தின் அத்தகைய இழிவான செயற்பாடுகளின் போது, தடையற்ற வன்முறைகளுக்குப் புகலிடமளிக்க அவர்கள் தயாராக இருப்பதால், தாம் பொதுவாகப் பகிர்ந்து கொள்ளும் விழுமியங்கள், மற்றும் கோட்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது அனைத்து மதங்களின் ஆதரவாளர்களினதும் பொறுப்பாகும். இது ஒரு மத சமுதாயத்தை இன்னொருவருக்கு எதிராகத் தூண்டும் எந்த முயற்சியையும் மறுதலிக்க உதவுகிறது. நடைமுறையில், அது சம்பிரதாய ரீதியான மத எல்லைகளைக் கடந்து, ஒரு ஒழுக்க ரீதியான பிணைப்பை வலுவூட்டி, மனித கண்ணியத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய, நியாயத்திற்கு கட்டுப்பட்ட மனிதப் பிறவிகளாக, நமது கூட்டு உணர்வுகளை மேம்படுத்துகிறது.

டாக்டர் சந்திரா முஸாபர்; மலேசியாவின், தார்மீக உலகிற்கான சர்வதேச இயக்கத்தின் தலைவராவார்.