Monday, April 10, 2017

பயங்கரவாதத்தைக் கையாண்டு மாபெரும் பயங்கரவாதியை உருவாக்குதல்
டேனியல் மப்சூத் (Daniel Mabsout)
தமிழில்: நாவலப்பிட்டி முஹம்மத் றஸீன்

பயங்கரவாதத்திற்கு எதிரான போர், பயங்கரவாதத்தை முற்றாக அழித்தொழிப்பதை நோக்காக் கொள்ளாமல்; அதற்கே உரமாக மாறுவதுபயங்கரவாதத்தை விட மோசமானதாகும். போர் வெறியர்கள், போரை உருவாக்குபவர்கள் மற்றும் பயங்கரவாதத்தை உரமிட்டு ஊக்குவிப்பவர்கள் சார்பாக நடைபெற்றுவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர், சிரியா மற்றும் ஈராக்கில் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தி வருவதை அனைவரும் அறிவர். உண்மையில் அங்கு என்னதான் நடக்கிறது? பயங்கரவாதத்தை அழித்தொழித்து அதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக அதனை உரமூட்டி வளர்த்து வருவதையே காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்குப் பதிலாக அதில் முதலீடு செய்து  லாபமீட்டும்; ஒரு வினோதமான முறையையே கையாள்கின்றனர்.
பயங்கரவாதம் என்பது அதனை உருவாக்கிய மேற்கத்திய சக்திகளுக்கு ஒரு பெறுமதி மிக்க சொத்தாகவே கருதப்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரையில், அது எப்போதும் முன்னேற்றம், பூரணத்துவம் என்பவற்றை நாடி நிற்கும் ஒரு அரிய தயாரிப்பும்  கண்டுபிடிப்பும் ஆகும். அத்தகைய அருமையான ஒரு உற்பத்தியை அதன் உற்பத்தியாளர் விட்டு கொடுப்பது அல்லது அழித்துவிடுவது என்பது ஒரு அப்பாவித்தனமான எதிர்பார்ப்பாகும். மாறாக, அதிக பணச் செலவும்; முயற்சியும் தேவைப்படும் இந்த பெறுமதிமிக்க தயாரிப்பான  பயங்கரவாதம் என்ற ஆயுதம் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்;படுத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டிய தேவையைக் கொண்டதாகவும் உள்ளது. இதுவே, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உண்மையான முகமாகும். இவ்வாறான ஒரு ஆயுதத்தின் பயன்பாட்டையும் நிர்வாகத்தையும்; நிர்ணயிக்கும் அதன் படைப்பாளிகள் மூலம்; இது மிக நேர்த்தியாக உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதே யதார்த்தமாகும்.
எந்த ஒரு உற்பத்திப் பொருளுக்கும் செம்மைப்படுத்தல் மற்றும் தொடர்ச்சியான நடைமுறைபடுத்தல் அவசியமாகின்றது என்பதை நாம் அறிவோம். அவ்வாறே நாம் பயங்கரவாத உற்பத்தியையும் நோக்க வேண்டும். எனவே, பயங்கரவாதத்தின் படைப்பாளிகளும் ஆதரவாளர்களும் அதனை நன்கு பரிசோதனை செய்து  பின்னர், பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற லேபளின் கீழ் தமது உற்பத்தியை சந்தைப்படுத்துகிறார்கள். அதன் உற்பத்தியாளர்கள் மூலம் அவர்களது தயாரிப்பு பரிசோதனைக்கு உள்ளாவதே பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பதை நாம் நன்கு விளங்கிக்கொள்வது அவசியம். புட்டின் உலகளாவிய பயங்கரவாத ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு கூட்டணி அமைப்பதில் அவசரம் காட்டுவது இதற்காகவேயாகும்.

உதாரணமாக, 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய மோசூல் விடுதலையை எடுத்துக்கொள்வோம். இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள், துப்பாக்கி வீரர்களுக்கும் சுற்றி வளைக்கப்பட்டுள்ள கார்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களுக்கூடாக  இடம்பெயர்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் 90 குடியிருப்புகளுள்  15 வரையிலான குடியிருப்புகளே விடுவிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவித்தன. நம்பகமான ஆதாரங்களின்படி பிரபலமான மக்கள் குழுவினர் - போரிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் ஏற்கனவே முழு மாகாணத்தையும்  விடுவித்திருக்கலாம், ஆனால் அவர்கள் போராட அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அவர்களது இலக்கு .எஸ்..எஸ் அழிப்பதல்ல. ஆனால் மேலும் அதன் செயற்திறன் மற்றும்; அதனைத் திறமையாக இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் என்பவற்றை ஆராய்ந்து மேம்படுத்தக்கூடிய வகையில் மேற்கொண்டு என்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதற்கான ஒரு பரிசோதனையாகவே அது அமைந்தது. லெபனான் போராட்டத்திலும்  இதுவே நடந்தது. அதாவது, அலெப்போவிற்குப் பின்  இட்லிப்பை விடுவிப்பதைத் தடுத்தது பயங்கரவாதத்துக்கு எதிரான போரை நிறுத்த நிர்பந்திக்கப்பட்டது.
சலா அஸ் சல்மான் என்ற பத்திரிகையாளர் அல் மோசூல் நகரில் .எஸ்..எஸ் அமெரிக்கா மூன்று குழுக்களாகப் பிரித்திருந்ததாக அல் மயாதீன் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார். அவர்களுள்; காலிப் அல் பாக்தாதி மற்றும் பலர் அடங்கிய முதல் குழுவின் மூலம்  தங்கள் நோக்கம் நிறைவேறிய பின் அதாவது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் காலாவதியானதன் பின் கொல்லப்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்தனர். இரண்டாவது குழு அங்கிருந்து வேறோர் இடத்தில், ஒன்றில் துருக்கியில் அல்லது அல் ரக்காவில் தங்குமிடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மூன்றாவது குழு அல் மோசூல் நகரில் தொடர்ந்து போராடி  அவ்விடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும் விதிக்கப்பட்டிருந்தது. மூன்று குழுக்களுள், தொடர்ந்து போராடுவதற்கு அமர்த்தப்பட்டிருந்த மூன்றாவது குழுவே  சிரியா, ஈராக் அல்லது ஏனைய நிலப் பரப்பில் அவர்களது பணிகள் மற்றும் பொறுப்புகள் என்பவற்றை நிறைவேற்றுவதற்காக  அமெரிக்காவால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பக்குவப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழுவாகும். இந்த காரணத்திற்காகவே, இந்த குழுவுக்கு நவீனரக ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், பிரபலமான மக்கள் கூட்டம் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அல் மோசுலுக்கு அருகே .எஸ்..எஸ்; குழுவுக்கு ஆயுதங்களைப் வழங்குவதை அதன் சொந்த கண்களாலேயே கண்டிருக்கிறது.

இவ்வாறு, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மிகவும் வினைத்திறனுடன் எதனையும் தாக்குப் பிடிக்கும்  வகையில் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பாக .எஸ்..எஸ் வளர்த்தெடுக்கும் செயல்பாட்டில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏதாவது ஒரு காரணத்தினால்; மூன்றாவது குழு செயலிழந்து போகும் பட்சத்தில் அவ்விடத்தை நிரப்பும் பதிலீடாக இரண்டாவது குழு தயார் நிலையில் இருக்கும்இவை உதிரிகளாக இருந்தாலும் அவர்களது உற்பத்தியின் உயிர்வாழ்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இந்த காரணத்திற்காகவே, நாங்கள் பயங்கரவாத்தையும் மீறிச்செல்லும் பயங்கரவாத எதிர்ப்பின் ஆபத்துகளைப் பற்றிப் பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத்தை உருவாக்கியவர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் சார்பான, இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர், மிகவும் ஆபத்தானதாக இருப்பதால் இது எல்லா வகையிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், இது முடிவில்லாத இரத்தப் பெருக்கை ஏற்படுத்தும் ஒரு தீராத காயமாகவே உள்ளது. எதிர்ப்புக் குழு அல்லது பிரபலமான மக்கள் கூட்டம் போன்ற தகுதி வாய்ந்த கட்சியினர் கிடைக்கவில்லை என்றால், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதிலிருந்து தவிர்ந்து கொள்வதே மேலானதுமனித உயிர்களைப் பாதுகாத்து மேலும் அழிவு மற்றும் இடப் பெயர்வு என்பவற்றைத் தவிர்த்து இவ்வாறான ஆயுதத்தை உருவாக்கியவர்களின்; பரிசோதனைக் களமாக எமது மண் மாறுவதைத் தடுக்க வேண்டும்.

இது பேரழிவு, இடப்பெயர்ச்சி மற்றும் இனக்கருவறுப்பு பற்றியது மட்டுமில்லாமல், முழுமையான தீமைகளின் ஒரு புதிய இனப்பெருக்கத்தின் உருவாக்கமுமாகும். அரபு அரசாங்கங்கள் இந்த கொடிய பரிசோதனைகளுக்கு தமது மக்களின் இரத்தத்தை இரையாக்க அனுமதித்துள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

No comments:

Post a Comment