Thursday, November 30, 2017

சிரியா, ரஷ்யா மற்றும் ஈரான் ராஜதந்திர அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்க, அமெரிக்காவும் அதன் கூட்டணியும் போருக்கு அரைகூவல்.

ஆங்கிலத்தில்: பினியன் கன்னிங்ஹாம் (Finian Cunningham)
தமிழில்: முஹம்மத் றஸீன், நாவலப்பிட்டி

கடந்த வாரம் சிரிய சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சியில்ஈரானிய, துருக்கிய தலைவர்களுடன் அதிபர் அஸாத் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால் ரஷ்ய சோஷி உல்லாச விடுதியில்; உபசரிக்கப்படடார். ஆனால் சிரியாவில் புதுப்பிக்கப்பட்ட சமாதானத்திற்கான முயற்சியில், அமெரிக்காவுக்கு எந்தவிதமான கரிசனையும் இருப்பதாகத் தெரியவில்லை.

சிரியாவில் ஐஎஸ்ஐஸ் (தாயிஷ், இஸ்லாமிய அரசு) மற்றும் ஏனைய பயங்கரவாத குழுக்கள் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் மோதல்களுக்கான கட்சிகள் சமாதானத்தை வெல்வதற்கான அரசியல் வழிவகைகளுக்கு அடிபணிந்தாக வேண்டும் எனக் கூறிய புட்டின் அகேமாக, இதனை அடைந்துவிட்டதாகவும் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், ரஷ்ய கருங்கடலில் உள்ள சோஷி உல்லாச விடுதியில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள், முன்னைய ஜெனீவா உடன்படிக்கையை வலுப்படுத்தி, சிரியாவின் இறையாண்மையுள்ள அதிபராக டமாஸ்கஸில் ஜனாதிபதி பஷர் அஸாத் மற்றும் அவரது அரசாங்கம் ஆகியவற்றிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

அஸாத் பதவி விலகவேண்டும் என்ற வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டணியினரின் கோரிக்கை எப்போதோ காலாவதியாகிவிட்டது. அந்த வெற்றிடம், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான கிட்டத்தட்ட ஏழு வருட இரகசியப் போர் தோற்கடிக்கப்பட்டுள்ளது அல்லது குறைந்தபட்சம், மேற்கத்திய ஆதரவுடனான தீவிரவாத போராளி குழுக்களின் முகத்திரை கலையப்பட்டுள்ளது என்பது மறைமுகமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் இந்த வாரம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் சோஷி பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்காமை சிரியப் போரில் அவர்களது நாசகாரப் போக்கினையே பறை சாற்றுகின்றது என்று புட்டின் கூறியுள்ளார்.

சிரியா, ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகியவை சமாதான பேச்சுவார்த்தைகளை சீரமைக்க முயலும் அதே நேரத்தில் பென்டகன் அதிபரான ஜேம்ஸ் மாட்டிஸ் கடந்த வாரம் அமெரிக்க இராணுவப் படைகள் சிரிய பிரதேசத்தைவிட்டு அகற்றப்படமாட்டாது எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத குழுக்களின் அழிவுக்கு மத்திலும் சிரியாவில் அமெரிக்கப் படைகள் விலகிச் செல்லத் தயக்கம் காட்டுவது, ஒருவேளை, ஒரு பிராந்திய மறுசீரமைப்பின் பகுதியாக ஒரு அமெரிக்க இராணுவ இருப்பை வலுப்படுத்துவதாக அமையலாம் என்றே நோக்கப்;படுகிறது. ஜனாதிபதி டிரம்ப்பின் கீழ் - தேர்தல் பிரச்சார வாக்குறுதிகள் இருந்தபோதிலும் - அமெரிக்கப் படைகளின் நிலை ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் கணிசமாக அதிகரித்தே வந்துள்ளது. இந்த வகையில் பார்க்கும்போது, சிரியாவில் அமெரிக்கப் பிரசன்னம் பிராந்திய கட்டமைப்புக்கு பொருந்துவதாகவே அமைகிறது.

இப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ வலிமையின் அதிகரிப்பு, சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஈரானுக்கும் லெபனானுக்கும் விரோதமான அச்சுறுத்தலையே கோடிட்டுக் காட்டுகின்றது.

கடந்த வாரம், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்; ஜேம்ஸ் மாட்டிஸ், பயங்கரவாத குழுக்களின் முரண்பாடுகள் முறியடிக்கப்பட்ட போதிலும் அமெரிக்க படைகள் சிரியாவில் தங்கியிருக்கும் எனக் கூறியுள்ளார். அமெரிக்கப் படைகள் சிரியாவில் தங்கள் இருப்புக்கு ஒரு சட்டபூர்வமான ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தை கொண்டுள்ளது என்று மாட்டிஸ் கூறுவதை, அது சர்வதேச சட்டத்தின் ஒரு தவறான புரிந்துணர்வு என்று ரஷ்யாவும் சிரியாவும் நிராகரிக்கின்றன.

ஆனால் மாட்டிஸின் தவறான நியாயத்தீர்ப்பைப் பொறுத்தவரையில், அவருடைய கூற்றுகள் சந்தேகத்தையே எழுப்புகின்றது. அவர் கூறுவதுபோல பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க அமெரிக்க படைகள் சிரியாவில் இருக்க வேண்டும் என்றால், பயங்கரவாதிகள் பெரும்பாலும் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் ஏன் அங்கிருக்க வேண்டும்?

அமெரிக்காவின் படைகளின் புதிய நோக்கம் மீண்டும் முளைவிடும் 'ஐஎஸ்ஐஎஸ் 2.0 தடுப்பதே' என்று மாட்டிஸ் கூறினார். .எஸ்..எஸ்ஸுக்கு எதிராக போராடுவதில் அமெரிக்கர்கள் அரிதாகவே ஈடுபட்டுள்ளனர் என்ற உண்மை ஒரு புறமிருக்க, உண்மையில், தீவிரவாதிகளைப் பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டுசெல்வதற்கான ஹெலிகாப்டர்கள் உட்பட  மேலும் பல வசதிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதை பிபிசி கூட அறிக்கையிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ மற்றும் பிராந்திய வாடிக்கை ஆட்சியாளர் மூலம் இரகசியமாக ஆயுதங்களையும்; நிதியுதவியையும் பெற்று வந்த பயங்கரவாத குழுக்களை செயலிழக்கச் செய்வதில் சிரிய அரபு இராணுவம், ரஷ்யா, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியவையே, முழுப் பலத்தையும் பிரயோகித்தன. ஐஎஸ்ஐஎஸ், நுஸ்ரா மற்றும் ஏனைய அனைத்து பயங்கரவாத குழுக்களும்;, போர் விமானங்களையும்; சிறப்புப் படைகளையும் சிரியாவில் குவிப்பதற்கு அமெரிக்காவிற்கு ஒரு போலிச் சாட்டாகவே இருந்தது - உண்மையில் இது ஒரு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு என்றே சிரிய அரசாங்கமும்; ரஷ்யாவும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன.

சிரியாவில் .எஸ்..எஸ்ஸை தோற்கடித்தது அமெரிக்கா எனவும், இது ஐஎஸ்ஐஎஸ் 2.0 என மறுபிறவி எடுத்துள்ளதாகவும் சிரிய நிலப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதற்கு அது அடிப்படையாக உள்ளது என ஒரு மாயையை ஏற்படுத்தி மாட்டீஸ் எச்சரிக்கிறார். அமெரிக்கர்களின் இந்த மாயை, சிரியாவில் அமெரிக்கா தலையிடுவதை 'சட்டபூர்வமாக்குவதற்கான' முயற்சியே அன்றி வேறில்லை. இப்போது அமெரிக்கப் படைகள் அங்கேயே இருப்பதை நியாயப்படுத்தி - பயங்கரவாதிகளுக்கு எதிரான உண்மையான வெற்றியாளர்களான, சிரியா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை இருட்டடிப்பு செய்ய முயல்கின்றன.

பொதுமக்கள் பார்வைக்கு அப்பால், அமெரிக்க படைகள் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றில் தங்கள் இருப்பை வழுப்படுத்த முயல்கின்றன. அது ஒரு 'அதிகாரபூர்வமான ஏமாற்று' என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்புவதற்கு டிரம்ப் நிர்வாகமும் பென்டகனும் அமெரிக்க மக்களின் முதுகில் சவாரி செய்கின்றன.

வாஷிங்டனின் அதிருப்திக்கு மத்தியில்;, சிரியாவில், அமெரிக்கா 13 இராணுவ தளங்களை வைத்துள்ளது என்று துருக்கி கடந்த வாரம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் ஐஎஸ்ஐஸ் மற்றும் பிற பயங்கரவாத வலையமைப்புகளைத் தோற்கடிப்பதில் மிகுந்த இராணுவத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த, ரஷ்யா, ஐந்து இராணுவத் தளங்களை மட்டுமே கொண்டுள்ளது.

வடக்கு பிரதேச நகரமான ராக்காவில் இருந்து சுமார் 140 கிலோமீட்டர் தூரத்தில் கோபானி அருகே மிகப் பெரிய அமெரிக்க தளங்களில் ஒன்று உள்ளது. கடந்த வாரம் அமெரிக்கப் படைகள் வேரூண்றும் என்று மாட்டிஸ் கூறிய, இடம் இதுவே என்பதில் சந்தேகமே இல்லை.
கோபனியில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் கடந்த ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் தரமுயர்த்தப்படடுள்ளது, ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வகை விமானங்கள் மட்டுமே தரையிரங்கக் கூடிய இந்த குறிப்பிட்ட விமானத் தளம், மிகப்பெரிய படைகளைக் கொண்டுசெல்லும் விமானங்கள் - மற்றும் சரக்கு விமானங்கள் உட்பட பென்டகனின் கடற்படையின் ஒவ்வொரு வகை விமானங்களும் தரையிறங்கக்கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வட ஈராக்கில் கயாரா மேற்கு முதல் தக்பா அணை, வரை ரக்கா வடக்கு என்பவற்றை இணைக்கக்கூடிய வகையில் புதிய விமான தளங்களின் ஒரு சங்கிலித்தொடரின் ஒரு பகுதியாக கோபனி அமெரிக்க இராணுவ தளம் அமைந்துள்ளது.

உத்தியோகபூர்வமாக, பென்டகனின் படை மேலாண்மை நிலைக் கொள்கையின் கீழ் சிரியாவில் 500 துருப்புக்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்று, உண்மையான எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

பென்டகன் நாட்டில் 120 நாட்களுக்கு குறைவான செலவின அலகுகளைக் கணக்கிடுவில்லை என்பதால் தவறான கணக்கீட்டின் பெரும்பகுதி உயர்வடைகிறது. இந்த அலகுகள், பொறியியலாளர்களும் துருப்புக்களும் நிர்மாணிக்கும்; பாலங்கள், சாலைகள், மற்றும் இறங்குதுறைகள்; ஆகியவற்றையும் உள்ளடக்கும்

அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் துருப்புக்கள், போர் விமானங்கள் மற்றும் கப்பல்களைக் கணக்கிலெடுக்காது 'சுழற்சிமுறையிலான இருப்பு' எனக் குறிப்பிடுவதன் மூலம் தன்னிச்சையாக பால்டிக், கருங்கடல் பகுதிகளிலுள்ள படைகளின் அளவை எப்படி குறைத்து மதிப்பிடுகிறது என்ற  ஒரு நேரடி ஒப்புமை இங்கு உள்ளது. ஆனால் நீங்கள் அடிக்கடி சுற்றி வரும்போது, நடைமுறையிலுள்ள படைகளின் அளவு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதைவிட நிரந்தரமானதாகவும் நடைமுறையில் மிகப்பெரியதாகவும் உள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் 2.0 ஆக அதன் பதிலிகள் திரும்பி வரமாட்டார்கள் என்பதை உறுதி செய்வதுடன் ஜெனீவாவில் எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகள் நவம்பர் 28 ம் திகதி தொடங்க இருப்பதை உறுதி செய்வதற்காகவே, விரிவாக்கப்பட்ட அமெரிக்கப் படைகள் அங்கு இருப்பதாக மாட்டீஸ் கூறியுள்ளார்.

'நாங்கள் இப்போது ஜெனீவா பேச்சுவார்த்தை செயல்படுவதற்கு முன்பே விலகிச் செல்லப்போவதில்லை' என லண்டனில் தனது பிரிட்டிஷ் நண்பர்களைச் சந்தித்த போது மாட்டீஸ் கடந்த வாரம் கூறினார்:

வாஷிங்டன், சிரிய நிலப்பகுதியின் சட்டவிரோதமான இராணுவ ஆக்கிரமிப்பை அரசியல் வழிமுறைக்குக் கொண்டுவரும் வகையில் பயன்படுத்துகிறது என்பதையே இது காட்டுகிறது. சிரிய நிலப்பகுதியை வலுக்கட்டாயமாக வைத்திருப்பதன் மூலம், வாஷிங்டன் ஒருவேளை அஸாத் அரசாங்கம் தனது கோரிக்கைகளுக்கு இணங்கக்கக்கூடும்; அல்லது ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதற்கு தோல்வியுற்ற எதிர்ப்பு சக்திகளுக்கு கூடிய அதிகாரத்தை அனுமதிக்கக்கூடும் என்று கணக்கிட்டிருக்கலாம்

அமெரிக்கா, சிரியாவில் உண்மையாகவே ஒரு அரசியல் வழிமுறைக்கான ஈடுபாட்டைக் கொண்டவர்களாக இருந்தால், ஏன் அதன் இராஜதந்திரிகள் ஜெனீவா உச்சி மாநாட்டிற்கு தயாராவதற்காக இந்த வாரம் ரஷ்ய-ஏற்பாட்டில் சோஷியில் இடம்பெறும்; பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை?

ஆனால் இதைவிட மோசமான விடயம் என்னவென்றால், அமெரிக்கப் படைக் கட்டமைப்பின் பிராந்திய அளவிலான சூழல்; - பெரும்பாலும் அமெரிக்க மக்கள் அறியாத இரகசியமாகவே உள்ளது என்பதுதான். வாஷிங்டன் தனது வாடிக்கை ஆட்சியாளர்களான  சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து நேரடியாகவோ அல்லது லெபனான், யேமன் போன்றவற்றினூடாகவோ ஈரானுடன் ஒரு மோதலை உருவாக்குவதையே நோக்காகக் கொண்டுள்ளது. சிரியாவில் விரிவடைந்து வரும் இராணுவப் பிரசன்னம், அந்த நாட்டில் போர் இன்னும் முடிவடையவில்லை என்பதையும். அதேநேரம், அது இன்னும் பேரழிவு தரக்கூடிய பிராந்திய மோதலுக்கு முன்னோடியாகவும் இருக்கலாம் என்பதையுமே குறித்து நிற்கின்றது.
 -------------------------------------------------------------------------------------------------------------------------
பினியன் கன்னிங்ஹாம் (Finian Cunningham) சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக விரிவாக எழுதியுள்ளார், அவை பல மொழிகளில் கட்டுரைகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவர் விவசாய இரசாயனவியலில் ஒரு முதுநிலைப்; பட்டதாரி. பத்திரிகை ஊடகவியலில் தனது வாழ்க்கையைத் தொடரும் முன், இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ் இரசாயனவியல் ரோயல் சொசைட்டியில் ஒரு அறிவியல் பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார். அத்துடன் அவர் ஒரு இசைக்கலைஞரும் பாடலாசிரியரும் ஆவார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக, அவர் தி மிரர், ஐரிஷ் டைம்ஸ் மற்றும் இன்டிபென்டன்ட் உட்பட முக்கிய செய்தி ஊடக அமைப்புகளில் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார்;.


No comments:

Post a Comment