Sunday, August 12, 2018


இம்ரான் கான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா?

ஆங்கில மூலம்: ஸபர் பங்காஷ்
தமிழில்: முஹம்மத் றஸீன், நாவலப்பிட்டி



மத்திய கூட்டாட்சி அரசாங்கத்துடன்;, நான்கு மாகாணங்களுள், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா என்ற இரு மாகாணங்களையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துள்ள பாகிஸ்தான் தெஹ்ரிக் - இன்சாஃப்(பி.டி..) கட்சியின் தலைவரான இம்ரான் கான் பெரிதும் திருப்தியடைந்த மனிதராக மேலெழுந்துள்ளார். ஸர்தாரி-பூட்டோ கூட்டணி மற்றும் ஷெரிப்கள் என்ற இரண்டு மாபியா குடும்பங்களிடமிருந்து மாற்றத்திற்கான அவரது 22 வருடகால நீண்ட போராட்டம் இறுதியில் வெற்றிக் கனியைச் சுவைத்துள்ளது.

பலூச்சிஸ்தானில்கூட, நான்கு இடங்களை மட்டுமே வென்றுள்ள பி.டி., அம்மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான இடங்களை (15) வென்றுள்ள பலூசிஸ்தான் அவாமி கட்சி (டீயுP) உடன் கூட்டரசாகத்துக்கான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது.

இம்ரான் கானின் கடின உழைப்பு, கரிசனம் மற்றும் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுடன் நீதிதுறையின் செயற்பாடுகள் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பு கடமைக்காக வழங்கப்பட்ட 380,000 ஊழியர்களின் கண்காணிப்பு என்பன (2013 இல் போல) இந்த தேர்தலைத் திருடுவதற்குத் தீர்மானித்திருந்த தீய சக்திகளிடமிருந்து மீட்டு தெஹ்ரிக்- இன்சாஃப் (Pவுஐ) கட்சிக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனரர அல்லது - ஜூலை 25 தேர்தல் முடிவுகள் மூலம் நிம்மதியடைந்துள்ளனரர என்பதில் சிறு சந்தேகம் உள்ளது.

பாகிஸ்தானிய அரசியலில் மிக மோசமான பாத்திரமாகக் கருதப்பட்ட மௌலானா பாஸ்லூர் ரஹ்மான், தேசிய சட்டமன்றத்திற்காகப் போட்டியிட்ட இரு இடங்களையும் இழந்துவிட்டதைவிட வேறொன்றும் அவர்களைத் திருப்திபடுத்தி இருக்க முடியாது.

 ஏனைய பல கட்சித் 'தலைவர்கள்' தமது ஆசனங்களை இழந்து பெரும் ஏமாற்றத்தை அடைந்தாலும் மக்கள் பெரும் திருப்திக்கு உள்ளாயினர். அவர்கள் எப்படி தோல்வி அடைய நேரிட்டது, என்பதை அறியும் ஆவலில் அவர்கள் இருந்தனர்.

 தேர்தலில் பாரிய மோசடி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே அவர்களது உடனடி பிரதிபலிப்பாக இருந்தது. முடிவுகளை நிராகரிக்கக் கோரி ஆர்ப்பாட்ட பேரணிகளைத் தொடங்குவதற்கான அரைகூவலை விடுத்தனர். அவ்வாறான முயற்சியில்; சிலர் மட்டுமே சேருவார்கள் என்பதை அவர்கள் கண்டுகொள்வார்கள்.

பாகிஸ்தானில் மிகவும் வேடிக்கையான தேர்தல் விதிகளில் ஒன்று, ஒரு வேட்பாளர் ஒரே முறையில் ஐந்து வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட முடியும் என்பதாகும். அதேநேரம், அவர் தேசிய மற்றும் மாகாண சபைகளுக்கு ஒரே நேரத்தில் போட்டியிடவும் முடியும்.

அரசியல் கட்சிகளின் 'தலைவர்கள்' மற்றும் பாராளுமன்றத்திற்கு அல்லது ஏதாவதொரு சட்டசபைக்கு தாம் 'முக்கியமானவர்கள்' என்று நினைக்கும் மக்கள்  அங்கு இலகுவாக செல்வதற்கான ஒரு ஏற்பாடே இது என்பது யாரும் கூறி தெரியவேண்டியதல்ல. எனவே இது உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், இம்ரான் கான் எதிர்நோக்கவேண்டிய சவால்கள் மிகத் தீவிரமானவையாகும். வாக்குறுதிகளை வழங்குவது எளிதானது, உள்ளும்; புறமும் நிறைந்துள்ள பல எதிரிகளுக்கு மத்தியில் அவற்றை நிறைவேற்றுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

மாற்றத்திற்கான வாக்குறுதியுடன் மக்கள் மத்தியில் அவர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார். உடனடித் தீர்வுகளிலேயே மக்கள் ஆர்வமாக இருப்பார்கள், எனவே, அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனால் விரைவில் அவர்களிடையே விரக்தி ஏற்பட்டுவிடும்.

பொருளாதாரம் அவரது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஏனெனில், முன்னாள் ஆட்சியாளர்களால் பில்லியன் கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டு மேற்கத்திய வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதால் அல்லது வெளிநாடுகளில் ஆடம்பர சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதால் பாகிஸ்தானின் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆசிப் அலி சர்தாரி மற்றும் ஊழல் பேர்வழியான அவருடைய சகோதரி ஃபெரியால் தல்பூர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் அங்கிருக்க வேண்டியவர்களே.

சுமார் 135 பில்லியன் டாலர் மதிப்புள்ள கொள்ளையிடப்பட்ட பணத்தை பாகிஸ்தான் மீட்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இம்ரான் கான் தானும் தனது அமைச்சர்களும் கடமைகளை வெளிப்படையாகவும் பொறுப்புணர்வுடனும் தொடங்கப்போவதாக உறுதி வழங்;கியுள்ளார். இஸ்லாமாபாத்தில் ஒரு அரண்மனையையும் கோட்டையையும் ஒத்த பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தான் குடியிருக்கப் போவதில்லை என தேர்தலுக்குப் பின் (ஜூலை 26) அவர் அறிவித்துள்ளார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் கவர்னர்களின் மாபெரும் மாளிகைகள் என்பன கல்வி நிறுவனங்கள் போன்ற பிரயோசனமான பாவனைக்காக மாற்றியமைக்கப்படும் அல்லது வாடகைக்கு விடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவை நல்ல அறிகுறியாக இருந்தாலும்; இன்னும் அடையாளக் குறியீடுதான். இம்ரான் கான் மற்றும் அவரது அமைச்சர்கள் மெர்சிடஸ் அல்லது பெஜெரோக்களைக் காட்டிலும் தமது பயணங்களுக்காக இன்னும் எளிமையான வாகனங்களைப் பயன்படுத்தினால் அது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும். இவ்வாறு ஏனைய சலுகைகளும் குறைக்கப்படுதல் அவசியம்.

தேர்தலுக்குப் பின் உடனடியாக, மத்தியிலும் அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சாப் மாகாணத்திலும் அவர் ஆட்சி செய்வதற்குத் தேவையான பெரும்பான்மையை அவருக்கு வழங்குவதற்காக அவரது கட்சியுடன் இணைந்திருக்கும் சுயேட்சையாளர்களின் மிகப்பெரிய அபிலாஷைகளை இம்ரான் கான்,  குறைக்க வேண்டும்,

இந்த நபர்கள் தாம் பேரம் பேசும் நிலைமையில் இருப்பதாக எண்ணி கூடிய விலையை எதிர்பார்க்கின்றனர், குறிப்பாக பஞ்சாபில் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் (பிஎம்எல்-என்) மிகவும் நெருக்கமான இரண்டாவதாக உள்ளது. அங்கு குழப்பங்கள் ஏற்பட அதிக வாய்பு உள்ளது.

பல தசாப்தங்களாக தவறான பாதையில் பயணித்த பாகிஸ்தானில் மக்கள் வாழ்க்கை வெகுவாக சிதைந்து விட்டது. இம்ரான் கான், நாட்டின் பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவரது முன்னுரிமை இருக்க வேண்டும். அதேநேரம், நாடெங்கிலும் நீதித்துறை மற்றும் பொலீஸ் சேவை என்பவற்றிலும் உடனடி சீர்திருத்தங்கள்  இன்றியமையாததாகும்.

இதேபோல், நிலச் சீர்திருத்தங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படுவதோடு, மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதிலும் கூடிய கவனம் செலுத்தப்படவேண்டும். பாகிஸ்தானில் அசுத்தமான குடிநீர் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான குழந்தைகள் இறக்கின்றன.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 129 முதல் 126 ரூபாயாக குறைந்ததிலிருந்து பி.டி. இன் வெற்றியில்; ஒரு நம்பிக்கை உணர்த்தப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக, குறிப்பாக வெளிநாட்டிலுள்ள பாகிஸ்தானியர்களிடமிருந்து, Pவுஐ அரசாங்கம் நிலம் மற்றும் சொத்து மாஃபியாக்களின் விவகாரங்களை விசாரிக்க வேண்டும்.

பாகிஸ்தானில் முதலீடு செய்யும் தமது கடின உழைப்பால் பெற்ற வருமானம், பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களால் தொடர்ந்தும் அபகரிக்கப்படுகிறது என்பதால்; பல வெளிநாட்டு பாக்கிஸ்தானியர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர்.

நீதிமன்ற முறைமை ஊழல் நிறைந்ததாக இருப்பதால் சட்டத்திற்கு எந்தவிதமான பாதுகாப்பும்; இல்லை, மேலும் இது போன்ற விஷயங்களை சமாளிப்பதற்கு பல தசாப்தங்கள் எடுக்கும். பாக்கிஸ்தானில், இவை 'தீவானி வழக்குகள்' என்று குறிப்பிடப்படுகின்றன.

வழக்கு விசாரணைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு வாதி இறக்க நேரிடலாம்;. எனவே, பேச்சுவார்த்தை மூலம் அவர்களது வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளுமாறு இரண்டு கட்சிகளுக்கும் அடிக்கடி அறிவுறுத்தப்படுகின்றது.

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் இம்ரான் கான் தீவிர கரிசனையுள்ளவராக இருந்தால், குறிப்பாக வெளிநாட்டு பாக்கிஸ்தானியர்களிடமிருந்து இதுவரை ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படும் (பாக்கிஸ்தான் ஏற்றுமதி வருவாயை விட அதிகமான) 20 பில்லியன் டாலர்களுக்கான முறையான கவலையை அவர்களிடம் பேசித் தீர்க்க வேண்டும்.

சீனாவின் பொருளாதார வெற்றி, பகுதியளவில் வெளிநாட்டு சீனர்கள் தமது முதலீடுகளை அவர்களது நாட்டின் வளர்ச்சியில் செலவிடுவதிலேயே தங்கியுள்ளது.

 ஜூலை 26 ம் திகதி தனது உரையில், இம்ரான் கான் வறுமை ஒழிப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பவற்றுக்கான அவர்களது வழிமுறைகளைக் கற்றுக் கொள்வதற்காக சீனாவுக்கு குழுக்களை அனுப்பப்போவதாகக் கூறியுள்ளார் (30 ஆண்டுகளில் சீனா 70 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து வெளியேற்றியது)

முதலீடு செய்வதற்காகத் தனது வெளிநாட்டவர்களை உத்தரவாதப்படுத்தும் சீனாவின் கொள்கையையும் அவர் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பல பிராந்திய நாடுகளிலும் சுற்றுச்சூழல் மாசடைதல் மற்றொரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதுவும் கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும்.

இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி மாபெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், அவற்றைச் சமாளிப்பதற்கான ஒரு விருப்பும் உறுதியான தீர்மானமும் இருந்தால் வெற்றி பெற முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.

குறிப்பாக இளைஞர்களிடையே அவர் உருவாக்கிய நம்பிக்கைகள் 1972 ல் சுல்பிகர் அலி பூட்டோ அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர் எற்பட்டதைப்; போன்று, மறுபடியும் நொறுங்கிவிடக் கூடாது என்பதே எங்கள் பிரார்த்தனை.


No comments:

Post a Comment