Sunday, August 12, 2018


மக்காவில் ஹஜ்: ஒரு இறை மையப் புனித யாத்திரை


இந்த வருடாந்த நிகழ்வானது, இறைவனுக்கு முன்பாக ஒற்றுமையை உறுதிப்படுத்தும் ஒரு உன்னத வணக்க வழிபாடாகும்

உலகின் மாபெரும் அமைதியான ஒன்றுகூடலில் ஒரு ஆக்கபூர்வமான வாழ்க்கையையே மாற்றியமைக்கும் அனுபவத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வவதற்காக உலகெங்கிலும் இருந்து சுமார் இரண்டு மில்லியன் முஸ்லிம்கள் சவூதி அரேபிய மக்கமாநகரை நோக்கி சாரி சாரியாக வருகின்ற காலம் அது!
ஒரு அர்த்தமுள்ள தொடர்ச்சியான சடங்குகளில் ஒரு செயல்திறன் மற்றும் பிரதிபலிப்பு மூலம் அல்லாஹ்வுடனான நீடித்த நெருக்கத்துக்கு வழிவகுக்கும் நோக்கத்தைக் கொண்டதாக, இந்த உயர்ந்த ஆன்மீக நிகழ்வு அமைந்துள்ளது.
இஸ்லாமிய புனித நூலான குர்ஆன் கூறுவதைப் போலவே, இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று என்ற வகையில்,  உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இப்பிரயாணத்தை மேற்கொண்டு  வாழ்நாளில் ஒரு தடவையாவது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் படைத்த  அனைத்து முஸ்லிம்களுக்கும் இது கடமையாக்கப்பட்டுள்ளது:
 'அங்கு தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும் (அது எத்தகைய ஆலயமெனில்) அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகிவிடுகின்றார். மேலும், ஆலயத்திற்குச் சென்று வர எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் - (அவர் தெரிந்துகொள்ளட்டும்) உலகத்தார் அனைவரைவிட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான்.'... (3:97)
இந்த ஹஜ் பயணத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் விதிகள் பற்றிய சுருக்கமான விளக்கம், இந்த மகத்தான இஸ்லாமிய நிகழ்வையும் அதன் நோக்கத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள உதவும்.
 உலகளாவிய சகோதரத்துவத்தின் சின்னம்
             புனித ஹஜ் யாத்திரை என்பது, உலகளாவிய சகோதரத்துவத்தின் அதி உயர் சின்னமாகும். அது வர்க்கம், வர்ணம், இனம், மொழி மற்றும் அனைத்து பிற மேலோட்டமான வேறுபாடுகளை விட்டு நீங்கி அனைத்து பிரபஞ்சத்தினதும் ஒரே ஒரு படைப்பாளியான இறைவனிடம் தம்மை அர்ப்பணிக்கும் இடமாகும்.
             அனைத்து யாத்ரீகர்களும் ஒரேவிதமான ஆடைகளை அணியும்போது, கூட்டத்தினர் மத்தியில் பொருளாதார அந்தஸ்து, உத்தியோக நிலை அல்லது உலக பொருள்களின் வேறு எந்த விஷயத்தின் அடிப்படையிலும்;; யாரும் யாரையும் வேறுபடுத்த முடியாத, பங்கேற்பாளர்களுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்புகளுக்கு வழிவகுக்கும் இறைவன் மீதான பொதுவான வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது.
             துல்-ஹஜ் சந்திர மாதத்தின் முதல் வாரத்தில் 'கஅபா' என்றழைக்கப்படும் பண்டைய, எளிமையான கன வடிவிலான அமைப்பை நோக்கி முஸ்லிம் யாத்ரீகர்கள் வரத் துவங்குகின்றனர். புனித நூலான குர்ஆனில் 'இறைவனின் இல்லம்' எனக் குறிக்கப்படும் இவ்வாலயம் நபி இப்ராஹீம் மற்றும் அவரது மகன் இஸ்மாயீல் ஆகியோரால், முஸ்லிம் சமுதாயத்தினர் ஒன்றுகூடி படைப்பாளியை வழிபடுவதற்கென்றே மீள்நிர்மாணம் செய்யப்பட்டது.

             இறைவன் மீதான முழுமையான அர்ப்பணிப்பை நிரூபித்து, அவனுக்கு எந்த பங்குதாரரும் இல்லை, எல்லாத் துதியும், அருளும் அவனுக்கே உரியது என யாத்ரீகர்கள்; இறைவனின் மகிமையை ஒற்றுமையுடன் கோஷமிடுகின்றனர்

சாதாரண வெற்று, வெண்ணிற ஆடை எதனை அடையாளப்படுத்துகின்றது?
               
             சடங்குகளை நிறைவேற்றுவதற்கு முன், அனைத்து யாத்ரீகர்களும் இஹ்ராம் என்று அழைக்கப்படும் தைக்கப்படாத - இரண்டு துண்டுகளிலான ஒரே மாதிரியான வெள்ளைநிற ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். - இது அனைத்து முஸ்லிம்களும் தாம் இறந்த பின் இறுதியில் தம்மை அடக்கம் செய்யும் நேரத்தில் மூடப்பட்டிருக்கும் போர்வையை ஒத்ததாக இருக்கும்.
             ஹஜ்ஜானது சட்டபூர்வமாக சம்பாதித்த தனிப்பட்ட பணத்துடன் பயணம் செய்யக்கூடியவர்களுக்கு மட்டுமே கடமையாக்கப்பட்டுள்ளது. கடன் அல்லது இரவல் வாங்கிய பணத்தோடுகூட சடங்குகளை செய்ய முயற்சிப்பது அனுமதிக்கப்பட்டதல்ல.
             அதன் சடங்கு முக்கியத்துவத்தை விட, உலகெங்கும் உள்ள முஸ்லிம் சமூகங்களின் விவகாரங்களைப் பற்றி அறிந்து மேம்படுத்தும் நோக்கில், உலகின் பல்வேறு கலாச்சாரங்களிலிருந்தும், பிராந்தியங்களிலிருந்தும் வரும் முஸ்லிம்களுடன் ஒன்றிணைவதற்கும், கருத்துக்களையும் சிந்தனைகளையும் பரிமாறிக் கொள்வதற்கும், யாத்ரீகர்களுக்கு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றது. 
 நபி இப்ரஹீமும்; அவரது குடும்பத்தினரும் அனுபவித்த தாங்கமுடியாத துன்பங்களை மீண்டும் நிறைவேற்றல்;
             இது அடிப்படையில் நபி இப்ராஹீம், அவர்களின் மனைவியான ஹாஜரா மகனான இஸ்மாயீல் அவர்களால் தாங்கிக் கொள்ளப்பட்ட கஷ்டத்தின் ஒரு மீள்-நிறைவேற்றமாகும். இது அவர்களின் காலத்தின் சாதாரண விக்கிரக வழிபாட்டாளர்களிடமிருந்து வந்த அனைத்து அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து, இறைவன் மீதான கீழ்ப்படிவுக்கும், நீடித்த இறைபக்திக்குமான ஒரு முன்னெடுப்பாகும்.
             யாத்ரீகர்கள் குழந்தை இஸ்மாயீலின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு சபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையில் நீரைத் தேடி ஓடிய ஹாஜராவின் தீவிரமான அடிச்சுவடுகளையும் பின்தொடர்கின்றனர். சோர்வடைந்த ஹாஜரா தாகத்தால்; தனது குழந்தை நிலத்தில் கால்களால் உதைத்துத் துடிக்கும் காட்சியைத் தவிர்க்க முயன்றபோது, அவரது காலடியில் இருந்து உயிர் காக்கும் அமுதமென ஒரு நீரூற்று வெளியானது. அது ஒரு கானல் நீரல்ல. தாயினதும் குழந்தையினதும் தாகத்தைத் தணித்த பின்பும் 'ஸம்-ஸம்' ('நிறுத்து நிறுத்து') என்று ஹாஜரா சப்தமிடும் வரை பீரிட்டுப்பாய்ந்த அந்த நீர் மிகப் பெறுமதிவாய்ந்த புனித நீர் ஆகும்.
             தனது அன்புக்குரிய மகனைக்கூட இறைவனுக்காகத் தியாகம் செய்ய முன்வந்து மீண்டும் தனது முழுமையான கீழ்ப்படிதலை உறுதிப்படுத்திய நபி இப்ராஹீமின் விருப்;பையும் ஹஜ் யாத்ரீகர்கள் நினைவு கூர்கின்றனர். பின்னர் அவரது மகனுக்குப் பதிலாகப் பலியிடுவதற்கு ஒரு செம்மறி ஆடு நபி இப்ராஹீமுக்கு அருளப்பட்டது.
ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான ஒழுங்கு முறைகள்
புனித யாத்திரை மேற்கொள்வது சம்பந்தப்பட்ட ஆழமான பொறுப்புகள் மற்றும் அந்தந்த யாத்ரீகர்கள்; சம்பந்தப்பட்ட தெளிவான ஒழுக்க விதிகள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1.            யாத்ரீகன் எல்லா சடங்குகளையும் தூய்மையான நோக்கங்களுடன், படைப்பாளனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்; ஒரே நோக்கத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

2.            மதரீதியான கட்டாய தருமங்கள், கடன் மற்றும் பிற நிதிப் பொறுப்புகள் போன்ற அனைத்து நிதி தெடர்பான கடமைகளையும் திருப்திப்படுத்துதல் போன்ற அனைத்து முன்நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதன் மூலம் யாத்ரீகன் தன்னை, ஆன்மீக அமைப்பிற்காகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

3.            ஹஜ் பயணத்தின்போது, யாத்ரீகர் உலக ஆசை மற்றும் செல்வம் அல்லது வணிக நலன்களைப் பற்றிய கவலையும் தவிர்க்க வேண்டும். அவரது ஒரே கவனம், சடங்குகள் மற்றும் இறைவனுடன் இணைதல் பற்றிய பிரதிபலிப்பாகவே இருக்க வேண்டும்.

4.            வணக்க வழிபாடு செய்பவர்கள், தம்முடன் உள்ளவர்களுடன் நல்லுறவு கொள்வதன் மூலம் தமது நடத்தையை மேம்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், புனித நிகழ்வின் போது மக்களுக்கு சேவைகளை வழங்குதல், பொருத்தமற்ற மொழி அல்லது நடத்தையை தவிர்த்தல் என்பனவும் இதில் அடங்கும்.

5.            யாத்ரீகர்கள் தம்முடனுள்ள சக யாத்ரீகர்களின் சாத்தியமான தேவைகளை நியாயமாக பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் சரியானதை கட்டாயப்படுத்தி, மோசமானவற்றை தவிர்க்கவும் வேண்டும்.

6.            யாத்ரீகர்கள் மற்றவர்களுக்கெதிரான அகந்தை அல்லது ஏனையவர்களைவிட மேலானவர் என்ற உணர்வு தவிர்க்கப்பட வேண்டும்.

-              மொழியாக்கம்: முஹம்மத் றஸீன், நாவலப்பிட்டி



No comments:

Post a Comment