Tuesday, August 14, 2018


அந்தலூஸியாவின் வெற்றி
 ஐரோப்பாவில் இஸ்லாமிய நாகரிகத்தின் எழுச்சி

முழு ஐரோப்பாவும் அறியாமையிலும்; போரிலும் முற்றாக மூழ்கியிருந்தபோது, இஸ்லாம் ஸ்பெயினுக்கு, அறிவையும் அற்புதமானதொரு நாகரிகத்தையும் கொண்டுவந்தது. அது அந்தப் பிராந்தியத்தை மட்டுமன்றி முழு ஐரோப்பாக் கண்டத்தையுமே ஆட்கொண்டது.

அந்தலூஸியா அல்லது ஐபீரிய தீபகற்பம், தென்மேற்கு ஐரோப்பாவில் ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் ஜிப்ரால்டர் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு நிலப் பிரதேசமாகும். 800 ஆண்டுகளாக, அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார துறைகளில் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஒரு பாலமாக செயல்பட்ட இஸ்லாமிய நாகரிகத்தின் ஒரு பகுதியாக இந்த நிலப் பிரதேசம் இருந்து வந்தது.

அந்தலுஸியாவின் பூர்வீக குடிகள், ஐபீரிய மக்களே ஆவர். இந்தப் பெயரிலேயே தீபகற்பம் அழைக்கப்படுகின்றது. ஆனால் பீனீஷியர்;, அதன்பின் கிரேக்கர் மற்றும் கார்தாஜினியர் போன்ற ஏனையோர்; பின்னர்  வந்து குடியேறியவர்களாவர். நீண்ட காலமாக ரோமர்களும் இந்த நாட்டை ஆண்டனர். ஐபீரிய தீபகற்பம் ரோமானிய அரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது ஐரோப்பாவின் தென்மேற்கு முனையில் ஒரு நீரிணை மூலமாக கண்டத்தை ஆபிரிக்காவுடன் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. கோத்தியர்கள் தீபகற்பத்தை தாக்கி ரோமர்களை வெளியேற்றும் வரை 5ஆம் நூற்றாண்டு வரை ரோமானியர்கள் அந்தலூஸியாவை ஆட்சி செய்தனர். இவ்வாறு அந்தலூஸியா ஆறாம் நூற்றாண்டில் கோத்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதும், கோத்திய அரசர்கள், கைப்பற்றப்பட்ட நிலப்பகுதி மக்களுக்கு எதிராக பல்வேறு வகையான சித்திரவதைகளைக் கட்டவிழ்த்து கொடுங்கோன்மையையும்; அடக்குமுறையையும் அவர்கள் மீது திணித்தனர்;. அவர்கள் கிட்டத்தட்ட அந்தக் குடிகளைப் பூண்டோடு  அழிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டனர். எனவே, கி.பி. 714 இல் அந்தலூஸியாவில் முஸ்லிம்கள் நுழைந்த போது, பெரும்பாலான நகரங்கள், தம்மை விடுவிக்க வந்த இராணுவத்திற்கு தங்கள் வாயில்களை திறந்துவிட்டன. ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களிடமிருந்து ஒரு நிவாரண வெளிப்பாடாக, மக்கள் இஸ்லாமிய சுலோகங்களில் தஞ்சம் புகுந்தனர்.

ஸ்பெயினில் முஸ்லிம்களின் வருகை ஹிஜ்ரி 89இல் இடம்பெற்றது. சமீபத்தில் முஸ்லிம்கள் கைப்பற்றிய வட ஆபிரிக்க  பிரதேசங்களின் ஆட்சியாளராக மூஸா இப்னு நஸீர் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் ஏனைய பகுதிகளையும் ஆக்கிரமித்து மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுக்க முற்பட்டார். எனவே, மூஸா இப்னு நஸீர்  ஸ்பெயினுக்கு இலக்கு வைத்து, தனது தளபதிகளில் ஒருவரான தாரீக் இப்னு ஸிய்யாத் என்பவரை ஸ்பெயினைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைத்தார். ஒரு சிறிய படையினருடன், ஜிப்ரால்டர் நீரிணையைக் கடந்து, ஹிஜ்ரி 92இல், பின்னர் அவருடைய பெயராலேயே அழைக்கப்பட்ட ஜபல் அல்-தரிக் (தாரீக் குன்று) என்ற இடத்தில் தரையிறங்கினார். பின்னாட்களில்; லத்தீன்மயமாக்கப்பட்ட அவ்விடம் ஜிப்ரால்டர் என்று மறுவியது. அவர்கள் 4 ஆண்டுகளுக்குள் அந்தலூஸியா முழுவதையும் வென்றனர்.

தாரிக் ஸ்பெயினில் தரையிறங்கியபோது, ஐரோப்பா விஞ்ஞான ஆராய்ச்சிக்கான எதனையும் ஏற்றுக்கொள்ளாத அஞ்ஞான இருளில்; மூழ்கி இருந்தது. மத்திய காலத்தின்; போது, தேவாலயம் மக்களின் நம்பிக்கைகள் மீது ஆழ்ந்த சோதனைகளை நடத்தியது. பல மக்கள், குறிப்பாக விஞ்ஞானிகள், நீதி விசாரணை என்ற பெயரில் மதத் துரோகிகள், பல்லிறை நம்பிக்கையாளர் மற்றும் மந்திரவாதிகள் எனக் கூறி குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டனர். இந்த மக்கள் ஆரம்பத்தில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, இறுதியில், மிகவும் மனிதாபிமானமற்ற முறைகளில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். முஸ்லிம்களின் வருகையால்;;, இந்த பிராந்தியத்தின் தலைவிதி முற்றாக மாறியது.

அந்தலூஸிய வெற்றியின் பின், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் சுதந்திரத்தை உறுதிசெய்து அவர்களுக்கு அடைக்கலமும் அளித்தனர். கிறிஸ்தவர்களுடனும் யூதர்களுடனும் முஸ்லிம்கள் காட்டிய கருணை மற்றும் நல்ல நடத்தை காரணமாக முஸ்லிம்களின் ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர்கள் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் அனுபவித்து வந்தனர். அவர்கள் தங்களுடைய சொத்து, அவர்களுடைய ஆலயங்கள்;, ஜெப மையங்கள் என்பவற்றுக்கு அவர்களே உரிமையாளர்களாக இருந்தார்கள்;. அதேநேரம், அவர்கள் இஸ்லாமிய சட்டத்தை  மீறி செயல்படும்போது, அவர்களது சொந்த சட்டங்களுக்கு இணங்கவே விசாரிக்கப்பட்டனர்.

இந்த மத சுதந்திரம் காரணமாக கிரிஸ்தவர்கள் முஸ்லிம்களுடன் மிக அன்னியோனயமாகப் பழகினர். அது முஸ்லிம் ஆண்கள் மற்றும் கிறிஸ்தவ பெண்களுக்கு இடையேயான திருமண பந்தங்கள் வரை சென்றன. மேலும், சில கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய பெயர்களைத் தாங்கி முஸ்லிம் அண்டை வீட்டுச் சடங்குகளிலும் கலந்து கொண்டார்கள். கிரிஸ்துவர் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களையும் ஒழுக்க முறைகளையும் சுதந்திரமாகப் பின்பற்றினர். அந்தலூஸிய முஸ்லிம்கள் யூதர்களைக்கூட சமாதானமாகவே நடத்தினர். ஐரோப்பாவின் சில பகுதிகளில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களில் சிலர் அந்தலூஸியாவில் அடைக்கலம் நாடினர்;. முஸ்லிம்கள் அவர்களுக்கு அவசியமான பாதுகாப்பையும் தங்குமிடத்தையும் வழங்கினர்.
அந்தலூஸியாவில்  இஸ்லாமிய விடுதலை யைத் தொடர்ந்து இந்தப் பிராந்தியத்தில் கலை மற்றும் கலாசாரம் செழித்தோங்கியது. ஸ்பெய்னில் முஸ்லிம் களின் மகத்தான சாத னைகள் ஐரோப்பிய கலா சாரத்தில் அதிக முக்கி யத்துவம் வாய்ந்தது என 'நாகரிகத்தின் ஒரு சுருக்க வரலாறு' என்ற நூலின் ஆசிரியர்; ஹென்றி ஸ்டீபன் லூகாஸ் குறிப்பிடுகின் றார். முஸ்லிம்களுக்கு ஸ்பெயினின் நுழைவா யில்கள் திறக்கப்பட்டபின், முஸ் லிம் ஆட்சியாளர்கள் இந்தப் பகுதியை இஸ்லாமிய கலாச்சாரம், போதனைகள் மற்றும் சிந்தனை என்பவற்றுடன் கலந்தனர். இஸ்லாமிய விழுமியங்கள், மரபுகள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட மக்களின் வாழ்க்கை மாற்றமடைந்தது. கொர்டோவா, டொலிடோ மற்றும் கிரானடா ஆகிய நகரங்கள் விஞ்ஞான, கலாசார, கலைத் திறன்களின் மையங்களாக மாறியது. இஸ்லாமியக் கல்வி ஐரோப்பிய கிறிஸ்துவ பிரதேசங்களில் குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி வரை வியாபித்தது.

இஸ்லாமிய வருகையுடன் அந்தலூஸியாவிற்கு வந்த அறிவியல் இயக்கம், இப்னு ருஷ்த், இப்னு அராபி, இப்னு செய்யித் பத்லமியூசி, ஹய்யான் இப்னு கலாஃப் கொர்டோபி, அப்துல் ஹமீது இப்னு அப்துன் அந்தலூஸி; போன்ற  பல புகழ்பெற்ற அறிஞர்கள் வளர்ந்து பிரகாசிக்கக் காரணமாக அமைந்தது. கொர்டோவா நூலகத்தில் 400,000 நூல்கள் இருந்தன. இது இஸ்லாமிய அந்தலூஸியாவில் ஒரு வியத்தகு நிகழ்வாகும். ஏனெனில், 12 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய கிறிஸ்தவ நூலகங்கள் சில நூறு நூல்களை மட்டுமே கொண்டிருந்தன.

அந்தலூஸியாவில்; இஸ்லாம், அப்பிரதேசத்தின் சமூக அமைப்பு முறைகளின் உருவாக்கம், அபிவிருத்தி, முன்னேற்றம் என்பவற்றுக்கு ஆதாரமாக விளங்கியது. எனவே, நகரங்கள், பொது சேவைகள், மற்றும் தொடர்பு விவகாரங்கள் ஆகியவை துரிதமாக முன்னேறின. தொழிற்துறையின் பல்வேறு துறைகளில் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சியுடன், நூல் நூற்பு மற்றும் நெசவுத் தொழில் போன்றவை வியத்தகு வளர்ச்சியைப் பெற்றன. கிரானடா துணிவகைகள், ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவுக்கு மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. ஐரோப்பிய சந்தைகளுக்கு உயர்தரமான துணிகளின் வருகையால், முஸ்லிம்களைப் போலவே கிறிஸ்தவர்களின் ஆடை அலங்காரங்களும் மாறியது.

கண்ணாடி வேலைகள் அதிகரித்து அந்தலூஸியாவில்; செழித்தோங்கியது. அப்பாஸ் இப்னு பிர்னாஸ் என்பவரே முதன் முதலாக கற்கள் மூலம் கண்ணாடியைத் தயாரித்தார். கொர்டோவாவிலிருந்த ஒருவர், ஹிஜ்ரி 9ம் நூற்றாண்டில்; சிக்கலான ஒரு பொறிமுறை மூலம் ஒரு பறக்கும் இயந்திரத்துடன் மூக்குக் கண்ணாடி மற்றும் வெப்பமானியையும் கண்டுபிடித்தார்.

ஒரு நவீன விவசாய முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்த பிரதேசத்தின் கிராமப்புற வாழ்க்கையை முஸ்லிம்கள் மேம்படுத்தினர். முஹம்மத் இப்னு அவ்வாம் எனப்படும் இப்னு அவ்வாம் வேளாண்மை பற்றிய தனது நூலில்; 600 தாவரங்களை ஆய்வு செய்துள்ளார். மண்ணின் வகைகள் மற்றும் புதிய தலைப்புகள், உர வகைகள், தாவர நோய்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் மற்றும் பழங்களைப் பாதுகாக்கும் உத்திகள் போன்றவற்றில்;; புதிய கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு பெறுமதி வாய்ந்த நூலாக இது கருதப்படுகின்றது.

மேலும், விவசாயம் மற்றும் விவசாயத் தொழில் நுட்பங்களை அபிவிருத்தி செய்வதில் அந்தலூஸிய முஸ்லிம்களின் முன்னெடுப்புகளால் ஐரோப்பியர்கள் பயனடைந்தனர். இவ்வாறு, குங்குமப்பூ போன்ற தாவரங்கள் இந்தப் பிராந்தியத்திலிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டன, அவற்றின் பயிர்ச்செய்கையும் ஊக்குவிக்கப்பட்டது.

விவசாய மலர்ச்சி வர்த்தகத் துறையிலும் தாக்கத்தை ஏறபடுத்தியது. அது மலாகா மற்றும் அல்மேரியா துறைமுகங்களை வர்த்தக பொருட்களின் ஏற்றுமதி மையமாக மாற்றியது. ஸ்பெயினின் பொருட்கள் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சில அந்தலூஸியப் பொருட்கள்; மக்கா, பாக்தாத் மற்றும் டமாஸ்கஸ் ஆகியவற்றின் சந்தைகளில் கூட காணப்பட்டன.

அந்தலூஸியாவில்; பிரமான்டமான கட்டிடங்கள்முஸ்லிம்களின் சக்தி,சுவை மற்றும் முன்முயற்சி என்பவற்றை எடுத்துக்காட்டியது. பெரிய தூண்கள், வளைவுகள், மினராக்கள்;, குவிமாடங்கள் மற்றும் சாந்து அலங்கார வேலைப்படுகள் ஆகியவை அந்தலூஸியாவில் முஸ்லிம் கட்டிடக்கலையின் மகத்துவத்தைப் பிரதிபலித்தன. கொர்டோவா பள்ளிவாசல் இந்த சகாப்தத்தின் பெரும் படைப்புகளில் ஒன்றாகும். இந்த அற்புதமான பள்ளிவாசலின் ஒரு பகுதி அந்தலூஸியாவில் கிரிஸ்துவப் படையெடுப்பின் போது, அந்த இடத்தில் ஒரு தேவாலயத்தைக் கட்டுவதற்கான முயற்சியில் சேதமடைந்தது. ஆனால் அது ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவில் இருந்து போலவே கிட்டத்தட்ட அதன் பெரும் பகுதி அதே அமைப்பில் எஞ்சி இருந்தது. ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் சிக்ரிட் ஹன்கே தனது நூலில் 'ஸ்பெயின், இஸ்லாமியக் கலையின் முழு உணர்திறன் மிக்க மகுடம்' என்கிறார். உலகில் ஏதாவதொரு வளர்ச்சி ஏற்பட்டால், அது அந்தலூஸியாவிலும் ஏற்பட்டது. உள்நாட்டு நாகரிக வளர்ச்சியில் இதுவரை எட்டப்படாத பாரிய வளர்ச்சி, அபிவிருத்தி மற்றும் செழுமை ஆகியவை அங்கு நிலைபெற்றிருந்தன. கொர்டோவாவில், கிறிஸ்துவர்கள் தங்கள் வணக்கத்திற்காக சீர்செய்யவும் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்ட பெரிய தேவாலயம் இருந்தது, அதே நேரத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் நகரத்தைச் சுற்றி எளிய பள்ளிவாசல்களைக் கட்டியிருந்தனர். கொர்டோவாவில் மக்கள் தொகை அதிகரித்த பிறகு, நகரில் ஜும்ஆ மஸ்ஜிதின் தேவை எழுந்தது. எனவே ஆட்சியாளர் அப்துல் ரஹ்மான் கிறித்துவர்களிடம் இருந்து ஒரு தேவாலயத்தை வாங்கி அதை ஒரு பெரிய பள்ளிவாசலாக மாற்றினார்.

இங்கு கூறப்பட்டது, ஐரோப்பாவில்; மாபெரும் இஸ்லாமிய நாகரிகத்தின் எழுச்சி மற்றும் பரவலின் ஒரு சிறிய பகுதியே ஆகும். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், 800 ஆண்டுகால புகழ்பெற்ற ஆட்சியின் பின்னர் முஸ்லிம்களிடையே பரவலாக காணப்பட்ட உதாசீன போக்கு காரணமாக இஸ்லாமிய அந்தலூஸியா அழிவடைந்தது. ஒரு ஐரோப்பிய நாட்டில் இஸ்லாத்தின் இந்த எழுச்சி மற்றும் வீழ்ச்சி இன்று முஸ்லிம்களுக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. 'ஆதிக்க சக்திகள் ஒரு சமுதாயத்தைச் சுரண்டி ஆதிக்கம் செலுத்த முனையும் போதெல்லாம் அவர்கள் சமுதாயத்தின் உணர்வுகளை சிதைத்து, மக்களை தீயொழுக்கத்தின் பால் ஊக்குவிக்க முயற்சிக்கின்றனர்; என்பதையே மனித வரலாறு காட்டுகிறது. இந்த இழிவான முறைமை, முஸ்லிம் ஸ்பெயினில் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த பேரழிவுக்கு மிகச்சிறந்த உதாரணமாகும். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களின் கைகளிலிருந்து ஸ்பெயினை மீட்டெடுப்பதற்கு இந்த முறையைப் பயன்படுத்தினார்கள், அவர்கள் முஸ்லிம்களின் உறுதி, தீர்மானம், துணிச்சல், நம்பிக்கை, தூய்மை என்பவற்றை அகற்றி அவர்களைப் பலமற்றவர்களாகவும் ஒழுக்ககேடர்களாகவும் குடிகாரர்களாகவும் பெண்பித்தர்களாகவும் மாற்றுவதில் வெற்றி பெற்றனர். அத்தகையவர்களை வெற்றி கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை அல்ல' என 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளரான ஆயத்துல்லா முர்தஸா முத்தஹ்ஹரி குறிப்பிடுகின்றார்.

முஹம்மத் றஸீன், நாவலப்பிட்டி.
தகவல்: HISTORY OF MUSLIM ANDALUSIA



No comments:

Post a Comment